பணம் பதவிக்காக பாஜகவுக்கு அடிமையாகவும், தேர்தல் வர்றதால திடீர்னு முதுகெலும்பு முளைச்ச மாதிரியும் நடிக்கணும்: உதயநிதி ஸ்டாலின்

பணம் பதவிக்காக பாஜகவுக்கு அடிமையாகவும், தேர்தல் வர்றதால திடீர்னு முதுகெலும்பு முளைச்ச மாதிரியும் நடிக்கணும்: உதயநிதி ஸ்டாலின்

மக்களவையில் முதலில் நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடர்பான மூன்று சட்ட மசோதாக்களுக்கு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட
மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் இதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனிடையே எதிர்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே, சர்ச்சைக்குரிய வேளாண் திருத்தச்சட்டம் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் இன்று நிறைவேறியது.

பணம் பதவிக்காக பாஜகவுக்கு அடிமையாகவும், தேர்தல் வர்றதால திடீர்னு முதுகெலும்பு முளைச்ச மாதிரியும் நடிக்கணும்: உதயநிதி ஸ்டாலின்

இதனிடையே ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு பதில் கார்பரேட்டை அனுமதிப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், நீண்டகால நோக்கில் கார்பரேட்கள் தயவில் வாழவேண்டிய சூழ்நிலையை சட்டம் ஏற்படுத்திவிடும் என்றும் வேளாண் திருத்தச்சட்ட மசோதாக்களை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. எஸ். ஆர் பாலசுப்ரமணியன் கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “வேளாண் மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு தந்த அதிமுக, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளது. பணம், பதவிக்காக பாஜகவுக்கு அடிமையாகவும் இருக்கணும், தேர்தல் வர்றதால திடீர்னு முதுகெலும்பு முளைச்ச மாதிரியும் நடிக்கணும். டெலிகேட் பொசிஷன். #விவசாயிகளின்விரோதிஅதிமுக” எனக் குறிப்பிட்டுள்ளார்