Home தமிழகம் நீட் தேர்வால் உயிரிழந்த விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு

நீட் தேர்வால் உயிரிழந்த விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த எலந்தங்குழியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த மன உளைச்சலால் கிணற்றில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே இரண்டு முறை தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் மூன்றாம் முறையாக நீட் தேர்வுக்கு விக்னேஷ் தயாராகி வந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

இந்நிலையில் எலந்தங்குழியில் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாலை அணிவிக்க விடாமல் தடுத்து உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றதால் திமுகவினர்-பாமகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விக்னேஷ் உடல் எடுத்துச் செல்லப்பட்ட பின்பு அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் உதயநிதி. மேலும் மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை திமுக சார்பாக வழங்கினார்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews