‘நாளைய முதல்வர்’ உதயநிதி – துரைமுருகன் பரபரப்பு பேச்சு… கலக்கத்தில் ஸ்டாலின்!

 

‘நாளைய முதல்வர்’ உதயநிதி – துரைமுருகன் பரபரப்பு பேச்சு… கலக்கத்தில் ஸ்டாலின்!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனல்பறக்கும் பிரச்சாரங்களை திமுகவும் அதிமுகவும் மேற்கொண்டுவருகின்றன. அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுக பிரச்சாரம் செய்கிறது. அதிமுகவும் சரி பாஜகவும் சரி வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முன்வைத்து திமுகவைப் பலமிழக்கச் செய்கின்றன. அதிமுகவிலும் பாஜகவிலும் வாரிசு அரசியல் இருந்தாலும் யாரும் பெரிதாகப் பேசுவதில்லை. ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் சிக்கி சின்னாபின்னமாகியது என்னவோ திமுக தான்.

‘நாளைய முதல்வர்’ உதயநிதி – துரைமுருகன் பரபரப்பு பேச்சு… கலக்கத்தில் ஸ்டாலின்!

குறிப்பாக, கட்சிக்குள் உதயநிதி வருகைக்குப் பின்னர் வாரிசு அரசியல் பிம்பத்தில் திமுக சிக்குண்டது. இக்குற்றச்சாட்டை முறியடிக்க கட்சி நிர்வாகிகள் உதயநிதியின் படத்தைப் பயன்படுத்தக் கூடாது என ஸ்டாலின் ஸ்ட்ரிக்டாகக் கூறிவிட்டார். இருப்பினும், ஆங்காங்கே சிலர் அவரின் படத்தைப் பேனர்களிலும் போஸ்டர்களிலும் பயன்படுத்தியே வருகின்றனர். இவ்வளவு நாளும் கீழ்மட்ட நிர்வாகிகள் ஸ்டாலினை வதைத்துவந்த நிலையில், தற்போது கூடவே இருந்த ஸ்டாலினுக்கு உடன்பிறாவா அண்ணனாக இருக்கும் துரைமுருகன் கூட உதயநிதி முதல்வர் என முன்மொழிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரிசு அரசியல் பேச்சை முறியடிக்கும் ஸ்டாலினின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்திருக்கிறது.

‘நாளைய முதல்வர்’ உதயநிதி – துரைமுருகன் பரபரப்பு பேச்சு… கலக்கத்தில் ஸ்டாலின்!

சென்னை கொளத்தூரில் நேற்று நடைபெற்ற ஸ்டாலினின் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “கருணாநிதி அமைச்சரவையிலும் துரைமுருகன் இருந்தான். ஸ்டாலின் அமைச்சரவையிலும் இருப்பான். நாளை உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பான். எனக்கு ஒன்றும் இல்லை. என்னை வளர்த்தவர் கருணாநிதி. எங்கோ இருந்த என்னைக் கொண்டுவந்து 2 கோடி தொண்டர்கள் உள்ள இக்கட்சியின் பொதுச் செயலாளராக அமர வைத்திருக்கிறாரே? இது ஒன்று போதாதா?” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

‘நாளைய முதல்வர்’ உதயநிதி – துரைமுருகன் பரபரப்பு பேச்சு… கலக்கத்தில் ஸ்டாலின்!

2019ஆம் ஆண்டு இளைஞரணிச் செயலாளராவதற்கு முன்பே உதயநிதி ஸ்டாலின் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போதைய சட்டப்பேரவை தேர்தலுக்கு ஸ்டாலினுக்கு முன்பே பிரச்சாரக் களத்தில் குதித்துவிட்டார். அதேபோல சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடவும் விருப்ப மனு கொடுத்துவிட்டார். கிட்டத்தட்ட அத்தொகுதியில் அவர் போட்டியிடுவது உறுதி எனக் கூறப்படுகிறது.