ராசாத்தி பாட்டியிடமும், கனிமொழி அத்தையிடமும் வாழ்த்து பெற்றேன் – உதயநிதி ஸ்டாலின்

 

ராசாத்தி பாட்டியிடமும், கனிமொழி அத்தையிடமும் வாழ்த்து பெற்றேன் – உதயநிதி ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின், புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபிக்கும் விதமாக அவரை எதிர்த்து பாமக சார்பில் போட்டியிட்ட கசாலி, அமமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் ஆகியோரை வீழ்த்தி வெற்றிப்பெற்றார்.

ராசாத்தி பாட்டியிடமும், கனிமொழி அத்தையிடமும் வாழ்த்து பெற்றேன் – உதயநிதி ஸ்டாலின்

10 ஆயிரம், 20 ஆயிரம் இல்லை சுமார் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று, தனது தந்தை ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் பெருமையை பெற்று தந்துள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து முத்தமிழறிஞரின் சி.ஐ.டி காலனி இல்லத்துக்கு சென்று ராசாத்தி பாட்டியிடமும், கழக மகளிரணி செயலாளரும் – கழக நாடாளுமன்றக்குழு துணைத்தலைவருமான
@KanimozhiDMK அத்தையிடமும் இன்று வாழ்த்து பெற்றேன். நன்றி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.