கொரோனாவில் இருந்த மீண்ட முதல் மாநிலமாக தமிழகம் வர வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

 

கொரோனாவில் இருந்த மீண்ட முதல் மாநிலமாக தமிழகம் வர வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

அனைவரும் தடுப்பூசி போட்டுகொண்டு கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலம் தமிழகம் என பெயர் எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கொரோனாவில் இருந்த மீண்ட முதல் மாநிலமாக தமிழகம் வர வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

சேலம் குரங்குசாவடி பகுதியில் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் 500 பெண்களுக்கு 5 கிலோ இலவச அரிசி மற்றும் காய்களை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கொரோனா வைரஸ் தொற்றால் கடந்தாண்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதுபோல் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் கொரோனா நிவாரண நிதி ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதன்படி முதல் கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது . மீதி 2 ஆயிரம் ரூபாய் இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும். இதுதவிர திமுக சார்பில் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதலில் கொரோனா தொற்று 45 ஆயிரம் என்ற நிலையில் இருந்தது. தற்போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் தினசரி கொரோனா பாதிப்பு 13 ஆயிரமாக குறைந்து இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுகொண்டு கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலம் தமிழகம் என பெயர் எடுக்க ஒத்துழைப்பு தரவேண்டும்” எனக் கூறினார்.