திமுக பரப்புரை செய்தால் மட்டும் தான் கொரோனா பரவுமா? – உதயநிதி பதிலடி!

 

திமுக பரப்புரை செய்தால் மட்டும் தான் கொரோனா பரவுமா? – உதயநிதி பதிலடி!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். கொரோனா அச்சுறுத்தலால் கூட்டங்கள் நடத்தக்கூடாது என அரசு அறிவித்திருக்கும் நிலையில், விதியை மீறி கூட்டம் கூட்டியதால் நேற்று உதயநிதி உட்பட பல திமுகவினர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

திமுக பரப்புரை செய்தால் மட்டும் தான் கொரோனா பரவுமா? – உதயநிதி பதிலடி!

கைது செய்தாலும் பரப்புரையை தொடருவோம் என உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி நடத்திய ஊர்வலத்தில் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் உதயநிதி போன்றோர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் இரண்டாம் அலை கொரோனா ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்திருந்தார்.

திமுக பரப்புரை செய்தால் மட்டும் தான் கொரோனா பரவுமா? – உதயநிதி பதிலடி!

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக பரப்புரை செய்தால் மட்டும் தான் கொரோனா பரவுமா?. பீகாரில் மோடி, டெல்லியில் அமித்ஷா உள்ளிட்டோர் பரப்புரை கூட்டம் நடத்தினர். தீபாவளிக்கு கூட்டம் கூடியது. அப்போதெல்லாம் குறைவான பரவாதா? என கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட நேற்று கூட்டம் நடந்தது அப்போது கொரோனா பற்றி அரசுக்கு தெரியாதா? என பதிலடி கொடுத்தார்.