திமுக தேர்தல் பணியை தடுக்கவே இபாஸ் ரத்து செய்யப்படவில்லை: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

 

திமுக தேர்தல் பணியை தடுக்கவே இபாஸ் ரத்து செய்யப்படவில்லை: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழகத்தில் மக்களின் நலன் கருதி இபாஸ் முறை அமலில் இருக்கிறது. மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த சேவை மக்களுக்கு பெரிதும் இடையூறு அளிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இபாஸ் நடைமுறையில் முதல்வர் பழனிசாமி தளர்வுகள் அளித்தார். ஆனால் அதனை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே போல, பிற மாநிலங்களுக்கு இடையேயான தனிமனித போக்குவரத்தை ரத்து செய்யும் இபாஸ் உள்ளிட்ட நடைமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

திமுக தேர்தல் பணியை தடுக்கவே இபாஸ் ரத்து செய்யப்படவில்லை: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

அதனால் இபாஸ் நடைமுறையை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் வரும் 29 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதனிடையே சட்டமன்றத் தேர்தல் பணிகளும் தொடங்கிவிட்டன. மேலும், வழக்கமாக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேயான விமர்சனங்களும் ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுகவை தேர்தல் பணி செய்ய விடாமல் தடுக்கவே அரசு இபாஸ் முறையை ரத்து செய்யாமல் இருக்கிறது என்று கூறினார். மேலும், சட்டமன்ற தேர்தலை குறித்த காலத்தில் நடத்துவார்கள் என நம்புகிறோம் என்றும் தெரிவித்தார்.