செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு! – 10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக கோரிக்கை

 

செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு! – 10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக கோரிக்கை

10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் வந்தார். கல்வித் துறை செயலாளரை சந்திக்க உள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. தலைமைச் செயலகம் வந்த உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறைக்குச் சென்று அவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். அடுத்தநாளே ஜூன் 15 என அறிவித்தார்கள். அதற்கு நன்றி தெரிவித்தேன். தற்போது ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்ற அறிவிப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். கல்வி முக்கியம் என்பதை விட மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதால், கொரோனா பாதிப்பு சீராகி, மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பியதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். 2, 3 நாளில் நல்ல முடிவை அறிவிப்போம் என்று அமைச்சர் கூறினார்.