ஸ்டாலினின் அமைச்சரவையில்… உதயநிதி ஸ்டாலின் இடம்பெறவில்லை!

 

ஸ்டாலினின் அமைச்சரவையில்… உதயநிதி ஸ்டாலின் இடம்பெறவில்லை!

திமுக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கவுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறவுள்ளது. ஸ்டாலினுடன் அமைச்சர்களும் நாளை பதவியேற்க உள்ளனர்.

ஸ்டாலினின் அமைச்சரவையில்… உதயநிதி ஸ்டாலின் இடம்பெறவில்லை!

நாளை பதவியேற்பு விழா நடைபெறவிருக்கும் நிலையில், ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறவர்கள் யார்? யாருக்கு எந்த துறை வழங்கப்பட உள்ளது? என்பதே பேசுபொருளாக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், சமூக வலைதளங்களில் திமுகவின் அமைச்சரவை பட்டியல் என்று ஒரு பட்டியல் வைரலானது. அது உண்மையான பட்டியல் அல்ல. அதில், உதயநிதி ஸ்டாலினின் பெயர் இடம் பெற்றிருந்தது. திமுகவில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் பலர் இருக்கும் சூழலில், ஸ்டாலினின் மகன் என்ற காரணத்தால் உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

ஸ்டாலினின் அமைச்சரவையில்… உதயநிதி ஸ்டாலின் இடம்பெறவில்லை!

இது குறித்து பேசிய உதயநிதி, ‘பொறுத்திருந்து பாருங்கள். நான் அமைச்சரவை பட்டியலில் இடம் பெறுகிறேனா? இல்லையா? என்பதை’ என சூசகமாக தெரிவித்திருந்தார். இதனால், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படுகிறதா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில், 34 பேர் கொண்ட ஸ்டாலினின் அமைச்சரவைப் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதில், உதயநிதி ஸ்டாலினின் பெயர் இடம்பெறவில்லை. நீர்ப்பாசனத்துறை அமைச்சராக துரைமுருகன், உள்ளாட்சித்துறை அமைச்சராக கே.என் நேரு, மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி, சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுப்பணித் துறை அமைச்சராக எ.வ வேலு உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.