“குடும்ப அரசியலால் வெறியேறினாரா கு. க. செல்வம்?” : உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

 

“குடும்ப அரசியலால் வெறியேறினாரா கு. க. செல்வம்?” : உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி தராததால் திமுக மேலிடம் மீது கடுப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் பாஜகவில் இணைய திமுகவிலிருந்து விலகவுள்ளார்.

“குடும்ப அரசியலால் வெறியேறினாரா கு. க. செல்வம்?” : உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

இதை தொடர்ந்து கு. க. செல்வத்தை திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்வதுள்ளார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின். ஆனால் எம்எல்ஏ குகசெல்வமோ,” நான் கட்சியிலிருந்து விலகுவதற்கு காரணம், மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது அல்ல; குடும்ப அரசியல் காரணமாக விலகுகிறேன்” என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.

“குடும்ப அரசியலால் வெறியேறினாரா கு. க. செல்வம்?” : உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “திமுகவில் இருந்து வெளியேற நினைப்பவர் எதுவேண்டுமானாலும் சொல்வார்கள். திமுகவில் இருந்து வெளியேற நினைப்பவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார்.