ஸ்டாலினுக்கு ரெட் சிக்னல் போட்ட உதயநிதி- உச்சக்கட்டத்தில் ’உள்வீட்டுச் சண்டை’!

 

ஸ்டாலினுக்கு ரெட் சிக்னல் போட்ட உதயநிதி- உச்சக்கட்டத்தில் ’உள்வீட்டுச் சண்டை’!

குடும்ப அரசியலை முன்னெடுத்துவரும் திமுகவிற்குள் இப்போது ’உள்வீட்டுச் சண்டை’ உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தந்தை, மகனுக்கு இடையிலான மோதல்தான் அந்த கட்சிக்குள் பிரதான பேசு பொருளாக இருந்து வருகிறது.

ஸ்டாலினுக்கு ரெட் சிக்னல் போட்ட உதயநிதி- உச்சக்கட்டத்தில் ’உள்வீட்டுச் சண்டை’!

திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற கொஞ்ச காலத்திலேயே தனது அரசியல் வாரிசாக உதயநிதியிடம் இளைஞரணி அமைப்பாளர் பதவியை அளித்தார். அதுவரை அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் சினிமா பக்கம் பார்வையைத் திருப்பியிருந்த உதயநிதிக்கு இந்த பொறுப்பு புதிய அனுபவமாக இருந்தது. ஆரம்பக் கட்டத்தில் சின்ன விஷயங்களுக்குக் கூட தந்தையிடம் ஆலோசனை பெற்றுவந்த உதயநிதிவின் நடவடிக்கைகளில் போகப் போக மாற்றம் ஏற்பட்டது. இதன் முதல் கட்டமாக கட்சி நியமனங்களில் மூக்கை நுழைக்க ஆரம்பித்தார் உதயநிதி.

இளைஞரணியைச் சேர்ந்த சிற்றரசு உள்ளிட்ட சிலரை மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகளில் அமர வைத்தார். இது சீனியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்த, அவர்களில் ஒருசிலர் இதுபற்றி ஸ்டாலினிடமே முறையிட்டிருக்கின்றனர். தொடர்ந்து இளைஞரணிக்காக உதயநிதி, ஸ்டாலினிடம் மீண்டும் சிபாரிசு செய்ய, பிரச்சனை வெடித்திருக்கிறது.

ஸ்டாலினுக்கு ரெட் சிக்னல் போட்ட உதயநிதி- உச்சக்கட்டத்தில் ’உள்வீட்டுச் சண்டை’!

’’ அனுபவம் இல்லாத ஆட்களை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உட்கார வைப்பது மிகவும் ஆபத்தானது. சீனியர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இவர்களால் சரிவர இயங்க முடியாது’’ என்கிற ஸ்டாலினின் சமாதானத்தை உதயநிதி கொஞ்சமும் சட்டை செய்யவில்லையாம். கட்சியில பெரிய அமைப்பு இளைஞரணிதான். அதைச் சேர்ந்தவங்களுக்கு முக்கியத்துவம் தந்தால்தானே மேலும் பல பேர் ஆர்வத்தோடு சேருவாங்க. வெறுமனே ஒப்புக்கு ஒரு பதவியில் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை’’ என பதிலுக்கு அவர் சீறியிருக்கிறார். பின்னர் குடும்பத்தினர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி இருக்கின்றனர்.

ஸ்டாலினுக்கு ரெட் சிக்னல் போட்ட உதயநிதி- உச்சக்கட்டத்தில் ’உள்வீட்டுச் சண்டை’!

இதுபோக, எதிர்வரும் எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் தந்தை, மகனுக்கு இடையே கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ’’இந்தமுறை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் தேர்தலில் போட்டியிட வேண்டாம்’’ என்பது ஸ்டாலின் கருத்து. ஆனால் உள்ளாட்சி அமைச்சர், துணை முதலமைச்சர் கனவில் மிதக்கும் உதயநிதி இந்த முறை போட்டியிட்டே தீர்வது என ஒற்றைக்காலில் நிற்கிறாராம். சகோதரி மூலம் சமாதானப்படுத்த ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

ஸ்டாலினுக்கு ரெட் சிக்னல் போட்ட உதயநிதி- உச்சக்கட்டத்தில் ’உள்வீட்டுச் சண்டை’!

உச்சக்கட்டமாக உதயநிதிக்கும் அவரது நெருங்கிய நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இடையேயான தொடர்புக்கு அணைபோட ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளும் கைகூடவில்லையாம். இதனால் டென்ஷனான ஸ்டாலின், அன்பிலை போனில் அழைத்து, ‘’ நீ சென்னையில இருக்கக் கூடாது என்பதற்காகவே திருச்சி மாவட்டச் செயலாளர் பொறுப்பு தந்து அங்கே அனுப்பிச்சி வெச்சேன். ஆனால் நீ வாரத்தில் பாதி நாட்களுக்கும் மேலா சென்னையில் உதயா கூட சுத்திக்கிட்டிருக்கிற. இதெல்லாம் நல்லதுக்கில்ல’’ என கடுமை காட்டியிருக்கிறார்.

விஷயம் உதயநிதிக்கு தெரியவர,’’என்னோட பெர்சனல் விவகாரங்களில் ரொம்ப தலையிட வேண்டாம்’’என சகோதரி மூலம் தந்தை ஸ்டாலினுக்கு ரெட் சிக்னல் போட்டிருக்கிறார்.