பாசிச போக்கு… ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவுக்கு உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு!

 

பாசிச போக்கு… ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவுக்கு உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு!

ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021க்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகரும் சேப்பாக்கம் – திருவல்லிகேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாசிச போக்கு… ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவுக்கு உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு!

அந்த பதிவில், ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021′ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது. தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். #cinematographact2021 என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களவையில் கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் திருத்தச் சட்டத்தின்படி ஒருமுறை தணிக்கைக்கு உள்ளான படத்தை மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். இது படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என திரைத்துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விஷால் உள்ளிட்ட பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் திரைத்துறையை சேர்ந்தவராக உதயநிதி ஸ்டாலினும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.