• August
    25
    Sunday

Main Area

Main



மு.க.ஸ்டாலினை மிஞ்சும் உதயநிதி... அதிரடி ஆட்டத்தால் அரண்டுபோய் தவிக்கும் சீனியர்கள்..!

ஸ்டாலின்
ஸ்டாலின்
Loading...

திமுக இளைஞரணிச் செயலாளராக கடந்த ஜூலை 4 ஆம் தேதி பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். அதன் பின் ஜூலை 6 ஆம் தேதி உதயநிதி தலைமையில் முதன் முதலாக அன்பகத்தில் அனைத்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பல மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், ‘இளைஞரணின்னா எந்த மாவட்டச் செயலாளரும் நம்மை மதிக்கறதில்ல. ஒன்றிய செயலாளர் கூட நம்மை மதிக்க மாட்றாங்க. மத்த அணி மாதிரியே நம்மளையும் ட்ரீட் பண்றாங்க. சில பேரு திமுக இளைஞரணின்னா ஏதோ தங்களுக்கு போட்டினு நினைச்சுக்குறாங்க.Udhayanidhi

 இதுக்கு முடிவு கட்டணும். இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்துறதுக்கு கூட மாவட்டச் செயலாளர், ஒன்றிய செயலாளர்னு அனுமதி வாங்க வேண்டிருக்கு. அதுக்கும் அவங்க இப்ப நடத்தலாம் அப்ப நடத்தலாம்னு இழுத்தடிக்கிறாங்க. நீங்க இளைஞரணிச் செயலாளரா வந்துட்டீங்க. இனிமேலாச்சும் இப்படி நடக்காம பாத்துக்கங்க’ என்பதையே இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் பலரும் தங்கள் பேச்சில் குறிப்பிட்டனர்.

இவையெல்லாம் குறித்துக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், நிறைவாக தான் பேசும்போது பல சப்ஜெக்ட்டுகளை பற்றி பேசியவர் மா.செக்கள் சப்ஜெக்ட்டை பற்றி பேசவே இல்லை. ’நான் பேசுறதை விட செயலையே அதிகம் விரும்புறேன்’ என்று அந்தக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார் உதயநிதி.

இதன்படி ஸ்டாலின் வீட்டில் உதயநிதி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞரணி அமைப்பாளர்கள் பேசியது பற்றி விவாதிக்கபட்டிருக்கிறது.udhayanidhi

‘இன்னும் சில மாசெக்களுக்கு உங்களை இளைஞரணிச் செயலாளரா போட்டது உறுத்தலாகவே இருக்கு. சில பேரு அதை வெளிப்படையா கட்சிக்காரங்கக்கிட்ட சொல்லிக் காட்டியும் இருக்காங்க. சில பேரு, ’எங்க ஆபீசு அறிவாலயம்தான் அன்பகம் இல்லை’னும் சொல்லியிருக்காங்க. உங்க மேல அதிருப்தியில இருக்கும் மாசெக்களை மாவட்டம் தோறும் சுற்றுப் பயணம் செய்யுறது மாதிரி போய் நேரா சந்தித்து சமாதானம் பேசுறதுன்னு ஏற்கனவே நாம பேசினோம். ஆனா அப்படி நாமளா போய் பேசினா, ஏதோ நாம இறங்கிப் போற மாதிரி ஒரு தோற்றம் வந்துடும்.

அதனால வேலூர் மக்களவைத் தேர்தல் தொடர்பாக போடப் போற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்பகத்துல போடச் சொல்லி தலைவரை வலியுறுத்துவோம். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்பகத்துல நடத்தினா எல்லாரும் இங்க வந்துதானே ஆகணும். உங்களைப் பாத்துதானே ஆகணும்?’ என்று மகேஷ் உள்ளிட்ட சிலர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து இந்த யோசனை ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அன்பகத்தில் நடக்கும் என்று முரசொலியில் அறிவிப்பு வெளியானது.stalin
 
அதாவது அறிவாலயத்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இனி அன்பகத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் திமுக தலைமை சொல்லியிருக்கும் செய்தி. இதன் அர்த்தம் ஸ்டாலினுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உதயநிதிக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதன்றி வேறல்ல

2018 TopTamilNews. All rights reserved.