`கட்சிக்குள் கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள்; இளைஞரணியை வலுவாக்க முயற்சி!’- களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்

 

`கட்சிக்குள் கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள்; இளைஞரணியை வலுவாக்க முயற்சி!’- களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்

தி.மு.கவில் இளம்பெண்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் கட்சித் தலைவரானார். தற்போது, திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் வந்துவிட்டார். கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட உதயநிதி, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியின் வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ச்சியாக இளைஞர் அணியை பலப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் 30 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்ப்போம் என்று அறிவித்து தற்போது அதில் கிட்டத்தட்ட 25 லட்சம் புதிய உறுப்பினர்களையும் இணைத்து இளைஞர் அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.

`கட்சிக்குள் கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள்; இளைஞரணியை வலுவாக்க முயற்சி!’- களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்

தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளைஞர் அணியை போன்று இளம் பெண்கள் பேரவையும் தொடங்க திட்டமிட்டு அதற்கான பணிகளிலும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது அந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக காணொலி காட்சி வாயிலாக தொடர்ச்சியாக நிர்வாகிகளிடம் பேசி வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது இளம் பெண்கள் பேரவையை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக கட்சியின் தலைமை ஒப்புதலைப் பெற்ற திமுக இளைஞரணி அதற்கான சட்டத் திருத்தத்தையும் விரைவில் மேற்கொள்ள உள்ளது. ஏற்கெனவே திமுகவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் மகளிரணி குழு செயல்பட்டு வரும் நிலையில் கட்சியில் மேலும் பெண்களை இணைக்கவும் குறிப்பாக கல்லூரி மாணவிகளையும் இளம்பெண்களையும் சமுதாயத்தில் சிறந்து விளங்கக்கூடிய இளம்பெண்களையும் இணைத்து கட்சிப் பணியாற்றி இளைஞர் அணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த இளம் பெண்கள் பேரவை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் இளைஞர் அணியை போன்ற மாநில துணைச் செயலாளர்கள், மாநகர மாவட்ட ஒன்றிய இளம்பெண்கள் அமைப்பாளர்கள் பொறுப்பு உருவாக்கப்பட்டு விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

`கட்சிக்குள் கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள்; இளைஞரணியை வலுவாக்க முயற்சி!’- களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்

வாரிசு அரசியல் என்றால் அது திமுகதான் என்று சொல்ல வேண்டும். தமிழகத்தில் எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு திமுகவில் அரசியல் வாரிசு கொடிகட்டி பறக்கிறது. கருணாநிதிக்கு பிறகு அழகிரி, ஸ்டாலின் என்று திமுகவில் மூத்த நிர்வாகிகள் கூறிவந்தனர். அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்த அழகு பார்த்தார் கருணாநிதி, ஸ்டாலினுக்கு துணை முதல்வராக்கினார். மத்தியில் அழகிரி, மாநிலத்தில் ஸ்டாலின் என்ற நிலையை உருவாக்கினார். இதனிடையே, தனது மகள் கனிமொழியை அரசியலுக்கு கொண்டு வந்தார் கருணாநிதி. அவரை மாநிலங்களவை எம்பியாக்கி அழகு பார்த்தார். ஆனால், சகோதரரான ஸ்டாலின் மீது அழகிரிக்கு அந்த அளவு பிணைப்பு கிடையாது. இதனால், ஸ்டாலினுக்கு எதிராக திடீரென அறிக்கைவிட்டு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தினார். கருணாநிதி இருக்கும்போது இது நடந்ததால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். தற்போது வரை அவர் திமுகவில் சேர்க்கப்படவில்லை. அவரது மகன் துரை தயாநிதியும் ஓரங்கப்பட்டுள்ளார். ஆனால், தனது மகன் உதயநிதிக்கு பதவிக்கு மேல் பதவி கொடுத்து வருகிறார் ஸ்டாலின். அதனால் அழகிரிக்கு கோபத்துக்கு மேல் கோபத்தை ஏற்படுத்தி வருகிறார். அழகிரியை கட்சிக்குள் விட்டால் தன்னை ஓரங்கட்டி விடுவார் என்று நினைத்து ஸ்டாலின் இன்னும் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். ஆனால், உதயநிதி கட்சிக்குள் தற்போது கோலோச்சி வருகிறார். பொறுத்திருந்து பார்ப்போம் இவரின் கச்சேரியை.