உங்களிடமிருந்து இந்துத்துவா குறித்த சான்றிதழ் எனக்கு தேவையில்லை…. கவர்னருக்கு பதிலடி கொடுத்த தாக்கரே

 

உங்களிடமிருந்து இந்துத்துவா குறித்த சான்றிதழ் எனக்கு தேவையில்லை…. கவர்னருக்கு பதிலடி கொடுத்த தாக்கரே

மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பது தொடர்பாக கவர்னர் எழுதிய கடிதத்துக்கு, உங்களிடமிருந்து எனது சித்தாந்தம் மற்றும் இந்துத்துவா குறித்த சான்றிதழ் எனக்கு தேவையில்லை என்று முதல்வர் உத்தவ் தாக்கரே பதில் கொடுத்துள்ளார்.

மத்திய அரசு லாக்டவுன் தளர்வுகளை அறிவித்ததையடுத்து பெரும்பாலான மாநிலங்கள் வழிபாடு தலங்களை பொதுமக்களுக்காக திறந்து விட்டன. ஆனால் மகாராஷ்டிராவில் அம்மாநில அரசு இன்னும் கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கவில்லை. இதனால் நேற்று சித்திவிநாயகர் கோயில் உள்பட பல கோயில் பகுதிகளில் வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி முதல்வர் உத்தவ் தாக்கரேவை கொஞ்சம் விமர்சனம் செய்து கடிதம் எழுதி இருந்தார்.

உங்களிடமிருந்து இந்துத்துவா குறித்த சான்றிதழ் எனக்கு தேவையில்லை…. கவர்னருக்கு பதிலடி கொடுத்த தாக்கரே
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா கவர்னர் கோஷ்யாரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில், வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பதை தள்ளி வைக்க ஏதேனும் தெய்வீக முன்னறிவிப்பை பெறுகிறீர்களாக அல்லது திடீரென்று நீங்கள் மதச்சார்ப்பற்றவர்களாக மாறிவிட்டீர்களா, நீங்கள் வெறுத்த வார்த்தையா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இது முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து கவர்னருக்கு உத்தவ் தாக்கரே பதில் கடிதம் எழுதினார்.

உங்களிடமிருந்து இந்துத்துவா குறித்த சான்றிதழ் எனக்கு தேவையில்லை…. கவர்னருக்கு பதிலடி கொடுத்த தாக்கரே
பாலிவுட் நடிகை கங்கனா ரானவத்

உத்தவ் தாக்கரே அந்த கடிதத்தில், எனது இந்துத்துவா உணர்வு குறித்து நீங்கள் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். ஆனால் உங்களிடமிருந்து எனது சித்தாந்தம் மற்றும் இந்துத்துவா குறித்த சான்றிதழ் எனக்கு தேவையில்லை. நான் வேறு யாரிடமிருந்தும் இந்துத்துவத்தை கற்றுக்கொள்ள தேவையில்லை. மகாராஷ்டிராவை அவமதித்து, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைத்த ஒருவரை (நடிகை கங்கனா ரனாவத்) சந்தித்து, அவளை உங்கள் வீட்டுக்கு வரவேற்றிருந்தால்.. அது நான் பின்பற்றும் இந்துத்துவத்தின் சித்தாந்தம் அல்ல என காட்டமாக தெரிவித்து இருந்தார்.