இடஒதுக்கீடு விவகாரம்.. டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் உத்தவ் தாக்கரே..

 

இடஒதுக்கீடு விவகாரம்.. டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் உத்தவ் தாக்கரே..

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சந்தித்து பேச உள்ளார்.

மகாராஷ்டிராவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு சட்டம், 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மராத்தா சமூகத்துக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு அரசியல் அமைப்புக்கு எதிரானது. மேலும், மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்களை கல்வி மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய சமூகமாக அறிவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இடஒதுக்கீடு விவகாரம்.. டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் உத்தவ் தாக்கரே..
பிரதமர் மோடி

இதனையடுத்து கடந்த மாதம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், எங்க மாநிலத்தின் மராத்தா சமுதாயத்தினருக்கு சட்டத்தின்படி கல்வியில் குறைந்தபட்சம் 12 சதவீதமும், பொது வேலைவாய்ப்பில் 13 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்குவதற்கு தகுந்த நடவடிக்கைகள் (கல்வி மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய சமூகம் என்று அறிவிக்க வேண்டும்) விரைவாக எடுக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இடஒதுக்கீடு விவகாரம்.. டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் உத்தவ் தாக்கரே..
திலீப் பாட்டீல்

இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இது தொடர்பாக அம்மாநில உள்துறை அமைச்சர் திலீப் பாட்டீல் கூறுகையில், முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் பிரநிதிகள் குழு நாளை (இன்று) பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளது. இந்த சந்திப்பின் போது, மராத்தா இடஒதுக்கீடு, ஓ.பி.சி. இடஒதுக்கீடு மற்றுமு் புயல் நிவாரணம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளது என தெரிவித்தார்.