அதிகாரத்தை இழந்ததால் பா.ஜ.க.வுக்கு வயிற்று வலி.. அதற்கு நாங்க மருந்து கொடுக்க முடியாது.. உத்தவ் தாக்கரே

அதிகாரத்தை இழந்ததால் பா.ஜ.க.வுக்கு வயிற்று வலி.. அதற்கு நாங்க மருந்து கொடுக்க முடியாது.. உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் அதிகாரத்தை இழந்ததால் பா.ஜ.க. வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளது அதற்கு நாங்கள் மருந்து கொடுக்க முடியாது என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கிண்டல் செய்தார்.

சிவ சேனா கட்சியின் 55வது நிறுவன நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வரும், அந்த கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: சிலர் (பா.ஜ.க.) அதிகாரத்தை இழந்த பின்னர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்கள்தான் கவனித்து கொள்ள வேண்டும்.

அதிகாரத்தை இழந்ததால் பா.ஜ.க.வுக்கு வயிற்று வலி.. அதற்கு நாங்க மருந்து கொடுக்க முடியாது.. உத்தவ் தாக்கரே
சிவ சேனா

நான் அவர்களுக்கு மருந்து கொடுக்க முடியாது, ஆனால் நான் அவர்களுக்கு அரசியல் மருந்து கொடுப்பேன். சிவ சேனா முன்பே காட்டிலும் வலுவாக வெளிப்படுகிறது. இந்துத்துவவா என்பது ஒரு நிறுவனம் அல்ல. அவர்கள் சொல்வது போல், சிவ சேனாவால் விடப்பட்டது ஏனென்றால் நாங்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து அரசு அமைத்ததால். இந்துத்துவா இதயத்திலிருந்து வருகிறது.

அதிகாரத்தை இழந்ததால் பா.ஜ.க.வுக்கு வயிற்று வலி.. அதற்கு நாங்க மருந்து கொடுக்க முடியாது.. உத்தவ் தாக்கரே
பா.ஜ.க.

இந்த அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை சிலர் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். நாம் பார்ப்போம். ஆனால் தற்போது நாங்கள் ஏழைகளுக்காக உழைக்க வேண்டும். நாடு சமூக அமைதியின்மைக்கு செல்கிறது. அதிகாரத்திற்காகவா அல்லது பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே அதிகாரம் வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.