எனது அரசு 3 சக்கர வண்டி என்றால் முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரயில் வண்டி.. உத்தவ் தாக்கரே கிண்டல்

எனது அரசு 3 சக்கர வண்டி என்றால் முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரயில் வண்டி.. உத்தவ் தாக்கரே கிண்டல்

சிவ சேனா எம்.பி.யும், சாம்னா பத்திரிகையின் செயல் ஆசிரியருமான சஞ்சய் ரவுத் அண்மையில் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் பேட்டி எடுத்தார். அந்த பேட்டி சாம்னா பத்திரிகையில் கடந்த சனிக்கிழமை வெளியானது. அதன் தொடர்ச்சி நேற்று வெளியானது. அதில் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது: ஆட்சியை கவிழ்க்க செப்டம்பர்-அக்டோபர் வரை ஏன் காத்திருக்க வேண்டும். நீங்கள் (பா.ஜ.க.) கவிழ்ப்பதில் மகிழ்ச்சி அடைவதால் இப்போதே அரசாங்கத்தை கவிழ்த்து விடுங்கள். சிலர் ஆக்கப்பூர்வமான வேலையில் இன்பம் பெறுகிறார்கள். சிலர் அழிவில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அழிவில் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்ந்தால், ஆட்சி கவிழ்ப்பை மேற்கொள்ளுங்கள்.

எனது அரசு 3 சக்கர வண்டி என்றால் முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரயில் வண்டி.. உத்தவ் தாக்கரே கிண்டல்

மகா விகாஸ் அகாடி அரசு ஜனநாயக கொள்கைகளுக்கு விரோதமானது நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் அதனை நீங்கள் கவிழ்க்கும் போது அது ஜனநாயகமா? எனது அரசு மூன்று சக்கர வண்டி என்றால், அது சரியான திசையை நோக்கி நகருகிறது. உங்களுக்கு ஏன் வயிறு வலி இருக்க வேண்டும்? முன்பு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டங்களில் கலந்து கொண்டபோது, ரயில் வண்டி மாதிரி 30 முதல் 35 சக்கரங்கள் இருந்தன. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

எனது அரசு 3 சக்கர வண்டி என்றால் முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரயில் வண்டி.. உத்தவ் தாக்கரே கிண்டல்

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு 3 சக்கர வண்டி போன்றது என்றும், அதன் ஸ்திரத்தன்மை குறித்து சந்தேகத்தையும் அடிக்கடி எழுப்பி வந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த பேட்டியில் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.