சச்சின்-கோலி சதங்கள் அடித்ததை பார்த்தோம்.. இப்பம் பெட்ரோல், டீசல் சதம் அடிப்பதை பார்க்கிறோம்.. உத்தவ் நையாண்டி

சச்சின்-கோலி சதங்கள் அடித்ததை பார்த்தோம்.. இப்பம் பெட்ரோல், டீசல் சதம் அடிப்பதை பார்க்கிறோம்.. உத்தவ் நையாண்டி

சச்சின்-கோலி சதங்கள் அடித்ததை பார்தோம். இப்பம் பெட்ரோல் மற்றும் டீசல் சதம் அடிப்பதை பார்க்கிறோம் என்று எரிபொருள் விலை தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கிண்டலடித்துள்ளார்.

கடந்த 2 வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அதேவேளையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்வை குறிப்பிட்டு மத்திய அரசை மறைமுகமாக கிண்டலடித்து உள்ளார் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே.

சச்சின்-கோலி சதங்கள் அடித்ததை பார்த்தோம்.. இப்பம் பெட்ரோல், டீசல் சதம் அடிப்பதை பார்க்கிறோம்.. உத்தவ் நையாண்டி
முதல்வர் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இது தொடர்பாக கூறுகையில், நாம், சச்சின்-கோலி சதங்கள் அடிப்பதை பார்த்தோம். இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் சதம் அடிப்படை பார்க்கிறோம். என்று கிண்டலாக தெரிவித்தார். தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் டாக்சி, ஆட்டோக்களை இயக்குவது கடினமாகி உள்ளது. இதனால் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

சச்சின்-கோலி சதங்கள் அடித்ததை பார்த்தோம்.. இப்பம் பெட்ரோல், டீசல் சதம் அடிப்பதை பார்க்கிறோம்.. உத்தவ் நையாண்டி
டீசல், பெட்ரோல் விலை உயர்வு

மும்பை மாநகராட்சி பகுதியில் வாடகை டாக்சி, ஆட்டோகளுக்கான புதிய உயர்த்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அதன் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.