லாக்டவுனை நீக்க நான் ரெடி…. ஆனால்….. உத்தவ் தாக்கரே ஆவேசம்

 

லாக்டவுனை நீக்க நான் ரெடி…. ஆனால்….. உத்தவ் தாக்கரே ஆவேசம்

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெறுகிறது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அங்கு வரும் 31ம் தேதி வரை லாக்டவுனை அம்மாநில அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. பொருளாதாரத்தை காரணம் காட்டி சிலர் லாக்டவுனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

லாக்டவுனை நீக்க நான் ரெடி…. ஆனால்….. உத்தவ் தாக்கரே ஆவேசம்

இந்த சூழ்நிலையில், சிவ சேனா எம்.பி.யும், சாம்னா பத்திரிகையின் செயல் ஆசிரியருமான சஞ்சய் ரவுத் அண்மையில் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் பேட்டி எடுத்தார். அந்த பேட்டி சாம்னா பத்திரிகையில் நேற்று வெளியானது. அதில் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது: பல நாடுகளில் கொரோனா வைரஸ் நிலவரம் கட்டுக்குள் வந்து விட்டதாக நினைத்து அவசர அவசரமாக லாக்டவுனை நீக்கினார்கள. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் இருக்கிறது என்பதை உணர்ந்தவுடன் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தியுள்ளார்கள். நான் ஒருபோதும் லாக்டவுன் முழுமையாக விலக்கப்படும் என்று சொல்ல மாட்டேன். ஆனால் சில விஷயங்களை படிப்படியாக மீண்டும் திறக்க தொடங்கினேன். மீண்டும் திறக்கப்பட்டதும் அதை மீண்டும் மூடக்கூடாது.

லாக்டவுனை நீக்க நான் ரெடி…. ஆனால்….. உத்தவ் தாக்கரே ஆவேசம்

எனவே பல்வேறு கட்டங்களாக நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன். பொருளாதாரம் அல்லது சுகாதாரம் குறித்து மட்டும் நீங்கள் சிந்திக்க கூடாது. இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும்.இந்த தொற்றுநோய் ஒரு உலகப்போர். இது முழு உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அவர்கள் ராணுவத்தை நாடியுள்ளார்கள். பல மக்கள் லாக்டவுனை எதிர்க்கிறார்கள். லாக்டவுனால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என அவர்கள் சொல்கிறார்கள். அது போன்ற மக்களுக்கு, நான் சொல்லி கொள்ள விரும்புகிறேன், லாக்டவுனை நீக்க நான் ரெடி ஆனால் அதனால் மக்கள் இறந்தால் நீங்கள் பொறுப்பை ஏற்றுகொள்வீர்களா? நாங்களும் கூட பொருளாதாரம் குறித்து அக்கறை கொண்டுள்ளோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.