நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்ரே ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainநம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்ரே !

Uddhav Thackeray
Uddhav Thackeray

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிர மாநிலத்தின் 19 ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்ரே நேற்று முன் தினம் பதவியேற்றார். அதன் பின்னர், இன்று மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூடியது. ஆளுநர் கோஷ்யாரி உத்தவ் தாக்கரேவை டிசம்பர் 3-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். 

floor test


அதன் படி, இன்று உத்தவ் தாக்ரே அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நடைபெற்றது. பெரும்பான்மையை நிரூபிக்க மொத்தமாக 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் உத்தவ் தாக்ரே 169 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து பாஜகவின் 105 எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தனர் . உத்தவ் தாக்ரேவுக்கு எதிராக எந்த எம்.எல்.ஏவும் வாக்களிக்கவில்லை. மேலும், 4 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து விலகினர். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணிகளோடு சேர்ந்து ஏற்கனவே உத்தவ் தாக்கரேவுக்கு 154 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.