• April
    05
    Sunday

Main Area

Main



காதல் கடித புத்தக வெளியிட்டு விழாவில் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சியை கிண்டல் அடித்த உத்தவ் தாக்கரே....

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் மறைந்த அப்துல் ரஹ்மான் அந்துலே தனது மனைவிக்கு எழுதிய கடிதங்கள் தொகுத்து புத்தகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட மகாராஷ்டிரா முதல்வரும், சிவ சேனா தலைவருமான உத்தவ் தாக்கரே அந்த புத்தகத்தை அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசும் பிரதமர் மோடி

இந்த கடிதங்கள் இதயத்திலிருந்து எழுதப்பட்டுள்ளன. மற்றும் 'மான் கி பாத்'-க்கும், 'தில் கி பாத்'-க்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. தில் கி பாத் இதயத்தலிருந்து நேரடியாக வருவது. அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகை இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவாக்காது. மூலதன முதலீடு மற்றும் மனித வளங்கள் நாட்டுக்கு தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் அப்துல் ரஹ்மான் அந்துலே

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மான் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார். இந்த  ரேடியோ நிகழ்ச்சியைதான் உத்தவ் தாக்கரே காதல் கடித புத்தக வெளியிட்டு விழாவில் மறைமுகமாக ஒப்பிட்டு பேசி கிண்டல் செய்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.