பதற்றத்தில் போன் செய்த தாக்கரே… “பிரதமர் ரொம்ப பிஸி; வந்தா சொல்றேன்” என கூலாக வந்த பதில்!

பதற்றத்தில் போன் செய்த தாக்கரே… “பிரதமர் ரொம்ப பிஸி; வந்தா சொல்றேன்” என கூலாக வந்த பதில்!

இந்தியா மீண்டும் ஒரு கொரோனா சுழலுக்குள் சிக்கிக்கொண்டு விட்டது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா கோரதாண்டவம் ஆடுகிறது. அங்கே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் என மருத்துவக் கட்டமைப்புக்குத் தேவையான அனைத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திலேயே இதே நிலை தான் என்பது கூடுதல் தகவல்.

பதற்றத்தில் போன் செய்த தாக்கரே… “பிரதமர் ரொம்ப பிஸி; வந்தா சொல்றேன்” என கூலாக வந்த பதில்!

இதனால் பற்றாக்குறைகளைத் தீர்க்கும் பொருட்டு மகாராஷ்டிரா முதலமைச்சரான உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டிருக்கிறார். அப்போது அவருக்குப் பதில் அவரது பிஏ போன் எடுத்ததாகக் கூறப்படுகிறது. போன் உரையாடல் குறித்து உத்தவ் தாக்கரே கூறியது வேடிக்கையாகவும் அதேசமயம் பிரதமர் அலுவலகத்தின் பொறுப்பற்ற தன்மை குறித்து வருத்தமாகவும் உள்ளது.

பதற்றத்தில் போன் செய்த தாக்கரே… “பிரதமர் ரொம்ப பிஸி; வந்தா சொல்றேன்” என கூலாக வந்த பதில்!

உரையாடல் குறித்துப் பேசிய உத்தவ், “‘மகாராஷ்டிராவுக்கு இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாளொன்றுக்கு தேவைப்படும். ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தடுக்க விமானங்களின் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பிவைக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுக்க நினைத்திருந்தேன். இதற்காக அவரை நான் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் எதிர்முனையில் பேசியவர்கள், பிரதமர் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் பயங்கர பிஸியாக இருக்கிறார். அவர் திரும்பி வந்தவுடன் இதுதொடர்பாகப் பேசலாம் என பதில் சொன்னார்கள்” என்றார்.

பதற்றத்தில் போன் செய்த தாக்கரே… “பிரதமர் ரொம்ப பிஸி; வந்தா சொல்றேன்” என கூலாக வந்த பதில்!

இது சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகவே பிரதமர் தனது அமைச்சரவை சகாக்களை வைத்து விவகாரத்தைப் பேசி முடித்திருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பிரதமர் உத்தவ் தாக்கரை அழைத்துப் பேசவில்லை; உத்தவ் தாக்கரே ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்; குறிப்பாக நாளொன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகும் மாநில முதலமைச்சர்.

பதற்றத்தில் போன் செய்த தாக்கரே… “பிரதமர் ரொம்ப பிஸி; வந்தா சொல்றேன்” என கூலாக வந்த பதில்!

இதே பிரதமர் தான் கொரோனா பரவலையும் பொருட்படுத்தாமல் கும்பமேளாவில் கலந்துகொண்டு கொரோனா விலைக்கு வாங்கிய சாதுக்களின் உடல்நலன் குறித்து தாமாகவே போன் செய்து நலம் விசாரித்திருக்கிறார். தாம் ஆளும் மாநிலம் என்றால் ஒரு விதமாகவும் வேறொரு மாநிலத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் அணுகுவது பிரதமருக்கு அழகல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கடிந்துகொள்கின்றனர்.