’சமூக நீதி மீதான தாக்குதலே புதிய கல்விக்கொள்கை’ உதயநிதி ஸ்டாலின்

 

’சமூக நீதி மீதான தாக்குதலே புதிய கல்விக்கொள்கை’ உதயநிதி ஸ்டாலின்

2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வழங்கியது..அதில் உள்ள பல அம்சங்கள் தமிழகத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. குறிப்பாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன. நடிகர் சூர்யா கடும் விமர்சனங்களை புதிய கல்விக் கொள்கை வரைவு மீது வைத்தார்.

இந்த நிலையில் நேற்று மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன.

’சமூக நீதி மீதான தாக்குதலே புதிய கல்விக்கொள்கை’ உதயநிதி ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட் மூலம் புதிய கல்விக் கொள்கை திட்டத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

சமூகநீதி மீதான தாக்குதலே புதிய கல்விக்கொள்கை என நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கிராமப்புற மாணவர் நலனைக் குழி தோண்டி புதைத்துவிடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டில், ’புதிய கல்விக்கொள்கை என்பதன் மூலம் மாநில உரிமைகள், சமூக நீதி போன்றவற்றின் மீது மீண்டுமொரு தாக்குதலை நடத்தியுள்ளது மத்திய அரசு. யாரையும் கலந்தாலோசிக்காமல் பாஜக கொள்கைகளை எல்லாம் வலியக் கோத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று.

’சமூக நீதி மீதான தாக்குதலே புதிய கல்விக்கொள்கை’ உதயநிதி ஸ்டாலின்

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக, ஒரே பாடத்திட்டம், தேர்வுமுறை  மற்றும் கட்டமைப்பினை உருவாக்கி தேசியக்கல்வி ஆணையம் அவற்றை கண்காணிக்கும் என புதிய கல்விக்கொள்கை கூறுகிறது. இது மாநிலங்களின் கல்வி அதிகாரங்களை பறித்து மாநிலத்தை வெறும் வரி கட்டும் அமைப்பாக மாற்றும் முயற்சியே

மொத்தத்தில் புதிய கல்விக்கொள்கை என்பது சமூக நீதி, மாநில உரிமை, கிராமப்புற மாணவர்கள் நலனைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, தனியார்மயம், ஒரே நாடு-ஒரே கல்வி, சமஸ்கிருதம் என ஆதிகால ஏற்றத்தாழ்வுக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடாகவே உள்ளது. இதனை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்