‘கடவுள் இருந்தால் உங்களைத் தண்டிப்பான்’ உதயநிதி ஸ்டாலின் சொல்வது யாரை?

 

‘கடவுள் இருந்தால் உங்களைத் தண்டிப்பான்’ உதயநிதி ஸ்டாலின் சொல்வது யாரை?

கொரோனா நோய்ப் பரவல் எப்போது கட்டுக்குள் வரும் என்ற கேள்விக்கு, ‘அது கடவுளுக்குத்தான் தெரியும்’ என்று தமிழக முதல்வர் சொன்னது குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட் ஒன்றைப் பதிந்துள்ளார்.

‘கடவுள் இருந்தால் உங்களைத் தண்டிப்பான்’ உதயநிதி ஸ்டாலின் சொல்வது யாரை?

நேற்று, (ஜூன் 20) சென்னை, வேளச்சேரியில் 350 படுக்கைகள் வசதிகொண்ட கொரோனா நோய் சிகிச்சை மையத்தைத் திறந்துவைத்தார் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி. அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார். ‘தமிழகத்தில்தான் அதிகளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் 17,500 படுக்கைகளைத் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது, கொரோனா நோய்ப் பரவல் எப்போது கட்டுக்குள் வரும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அது கடவுளுக்குத்தான் தெரியும்’ என்பதாக முதல்வர் பதிலளித்தர். இந்தப் பதிலுக்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வரின் பதிலை விமர்சனம் செய்யும் விதமாக ட்விட் ஒன்றைப் பதிந்துள்ளார்.

அதில், ‘இதுக்குமேல எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பான்’ – பக்தர்கள் சொல்லும் கடைசி வார்த்தைகள் இவை. ஆனால் இதைச் சொல்ல ஒரு முதல்வர் எதற்கு? உங்களின் இயலாமையால் எத்தனையெத்தனை மரணங்கள். கடவுள் உங்களைப் பார்த்துக்கொள்ளமாட்டான்
@CMOTamilNadu அவர்களே, இருந்தால் உங்களை தண்டிப்பான் #SaveChennai’ என்று குறிப்பிட்டுள்ளார்.