“எங்க தாத்தா மட்டும் இப்போ இருந்திருந்தா” – உணர்ச்சியில் உருகிய உதயநிதி!

“எங்க தாத்தா மட்டும் இப்போ இருந்திருந்தா” – உணர்ச்சியில் உருகிய உதயநிதி!

திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முன்பே எதிர்பார்ப்பு கூடியது. அதற்குக் காரணம் உதயநிதியின் விருப்ப மனு. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார். நோட் செய்ய வேண்டிய விஷயம் அவரைத் தவிர அங்கு யாரும் போட்டியிட விரும்பவில்லை. கிட்டத்தட்ட அவர் தான் வேட்பாளர் என்று உறுதியாகிவிட்டது. இறுதியில் அவரே வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

“எங்க தாத்தா மட்டும் இப்போ இருந்திருந்தா” – உணர்ச்சியில் உருகிய உதயநிதி!

மார்ச் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கலையும் முடித்துவிட்டு பிரச்சாரக் களத்திற்குத் திரும்பியிருக்கிறார் உதயநிதி. ஸ்டாலின் – எடப்பாடி காம்போவை காட்டிலும் உதயநிதி – எடப்பாடி காம்போவுக்கு தான் மவுசு அதிகம் இருக்கிறது. இதனால் உதயநிதியின் பிரச்சாரம் ஒவ்வொன்றும் கவனம் பெறுகிறது. உதயநிதி அவருக்கு மட்டுமல்லாமல் இன்னபிற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கும் ஆதரவாக வாக்கு சேகரித்துவருகிறார்.

“எங்க தாத்தா மட்டும் இப்போ இருந்திருந்தா” – உணர்ச்சியில் உருகிய உதயநிதி!

பிரச்சாரத்திற்குப் பின்னே செய்தியாளர்கள் சந்திப்பையும் உதயநிதி தவறவிடுவதில்லை. அப்போது அவர் கருணாநிதி குறித்து உருக்கமாகப் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சேப்பாக்கம் தொகுதியில் திமுகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

“எங்க தாத்தா மட்டும் இப்போ இருந்திருந்தா” – உணர்ச்சியில் உருகிய உதயநிதி!

என்னை வாரிசாகப் பார்ப்பதும், சேவகனாகப் பார்ப்பதும் மக்களின் சொந்த விருப்பம். இப்போது என் தாத்தா கருணாநிதி இருந்திருந்தால் மகிழ்ச்சியடைந்து இருப்பார். திமுகவிற்கு மக்கள் பெரியளவில் ஆதரவு கொடுக்கிறார்கள். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள். இப்போது மட்டும் தாத்தா இருந்திருந்தால் இதை எல்லாம் பார்த்து நிச்சயமாக சந்தோஷப்பட்டிருப்பார். அவர் முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களைப் பேசி தான் வாக்கு சேகரிக்கிறோம்” என்றார்.