கொரோனாவுக்கு தமிழகத்தில் 43 மருத்துவர்கள் மரணம் என்று வதந்தி பரப்பிய உதயநிதி! – மருத்துவர்கள் கண்டனம்

கொரோனாவுக்கு தமிழகத்தில் 43 மருத்துவர்கள் மரணம் என்று வதந்தி பரப்பிய உதயநிதி! – மருத்துவர்கள் கண்டனம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 43 மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக இந்திய மருத்துவ அசோசியேஷன் கூறியதாக ஒரு தவறான தகவலை தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்பிவருவதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கொரோனாவுக்கு தமிழகத்தில் 43 மருத்துவர்கள் மரணம் என்று வதந்தி பரப்பிய உதயநிதி! – மருத்துவர்கள் கண்டனம்
தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக தி.மு.க அச்சப்பட்டது போல உள்ளது. ஏற்கனவே கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் கட்சி மாறும் நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 43 மருத்துவர்கள் இறந்ததாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது போன்ற ஒரு தவறான தகவலை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்து வருகிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அளவில்

http://

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் பலியாவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் கொரோனா மரணங்களைத் தவணை முறையில் வெளியிடும் அடிமை அரசு, மருத்துவர்கள் நிலை குறித்தும் விளக்கியாக வேண்டும். எடுபிடிகளின் இந்த மெத்தனம் தமிழகத்துக்கே தலைகுனிவாகும்!” என்று கூறி ஐ.எம்.ஏ லிஸ்டை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவுக்கு தமிழகத்தில் 43 மருத்துவர்கள் மரணம் என்று வதந்தி பரப்பிய உதயநிதி! – மருத்துவர்கள் கண்டனம்
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல் தவறானது என்று இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு தெரிவித்துள்ளது. இது போன்ற ஒரு அறிக்கையை இந்திய மருத்துவ சங்கம் வெளியிடவில்லை என்று அதன் தலைவர் டாக்டர் ராஜா தெரிவித்துள்ளார். இதனால் பலரும் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்,

http://

“அன்று வாங்காத ரேப்பிட் கருவி கொள்முதலில் ஊழல் என்று அப்பா அறிக்கை, இன்று அரசியல் கத்து குட்டி மருத்துவர் இறப்பு என்று பொய் பேசி பரம்பரை மானம் காப்பாற்றுகிறார்.பேரிடர் நிலத்திலும் இப்படி பிணஅரசியல் செய்வதற்கு வெட்கமாக இல்லை??” என்று கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு தமிழகத்தில் 43 மருத்துவர்கள் மரணம் என்று வதந்தி பரப்பிய உதயநிதி! – மருத்துவர்கள் கண்டனம்
தவறான தகவல் வெளியிட்டு, மருத்துவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முயன்ற, கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.