“தெர்மாக்கோல், குட்கா, டயர்நக்கி” வினா – விடை போட்டி வைத்த உதயநிதி ; அதிர்ச்சியில் அதிமுகவினர்!!!

 

“தெர்மாக்கோல், குட்கா, டயர்நக்கி” வினா – விடை  போட்டி வைத்த உதயநிதி ; அதிர்ச்சியில் அதிமுகவினர்!!!

ராணிப்பேட்டை தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அதிமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தார்.

ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த உதயநிதி மக்கள் மத்தியில் பேசிய போது, “ திமுக வேட்பாளர் மக்களோடு மக்களாக இருந்து பல நலத்திட்டங்களை கொண்டு வந்தவர். ரேஷன் கடைகள், நீர்தேக்கத் தொட்டி, அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட 350க்கு மேற்பட்ட நலத்திட்டங்களை கொண்டு வந்தவர். அரசு கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக் , சாலை மேம்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துளீர்கள். திமுக ஆட்சி வந்ததும் உங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்றார்.

“தெர்மாக்கோல், குட்கா, டயர்நக்கி” வினா – விடை  போட்டி வைத்த உதயநிதி ; அதிர்ச்சியில் அதிமுகவினர்!!!

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் அனைத்து அமைசர்களுக்கும் பட்டப்பெயர் உண்டு. நான் பட்டப்பெயர்களை கூறுகிறேன்; நீங்கள் அவர்களின் பெயர்களை சொல்லுங்கள் என்றவர், ‘தெர்மாக்கோல், மெயின்ரோடு, குட்கா, எடுபுடி, டயர்நக்கி’ என்று வரிசையாக பெயர்களை சொல்ல அங்கு கூடியிருந்தவர்கள் அமைச்சர்களின் பெயர்களை கூறினர்.

“தெர்மாக்கோல், குட்கா, டயர்நக்கி” வினா – விடை  போட்டி வைத்த உதயநிதி ; அதிர்ச்சியில் அதிமுகவினர்!!!

அப்போது மீண்டும் பேச தொடங்கிய உதயநிதி, ஓபிஎஸ்-ஐ டயர் நக்கி என்று நான் சொல்லவில்லை. அவர்களுடன் தற்போது கூட்டணி வைத்துள்ள ராமதாஸ் தான் அப்படி சொன்னார்; அவர்தான் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்தார். தற்போது பணம் வாங்கி கொண்டு அதிமுகவில் கூட்டணி வைத்துள்ளார்” என்றார்.