ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்தை விடுங்க… இ-பாஸ் வாங்காம சாத்தான்குளம் எப்படின்னு சொல்லுங்க… – உதயநிதியை சீண்டும் ஆளுங்கட்சி

 

ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்தை விடுங்க… இ-பாஸ் வாங்காம சாத்தான்குளம் எப்படின்னு சொல்லுங்க… – உதயநிதியை சீண்டும் ஆளுங்கட்சி

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணமடைந்த செய்தியை விட சிலருக்கு உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளம் சென்ற விவகாரம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை சமூக ஊடகங்களை பார்க்கும்போது காண முடிகிறது.
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல், அது சாதாரண விஷயம் என்பது போல கடந்து சென்ற அ.தி.மு.க, பா.ஜ.க தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளம் சென்ற விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு வால் வீசி வருகின்றனர்.

ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்தை விடுங்க… இ-பாஸ் வாங்காம சாத்தான்குளம் எப்படின்னு சொல்லுங்க… – உதயநிதியை சீண்டும் ஆளுங்கட்சிஅமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி அ.தி.மு.க-வின் முன்னணி நிர்வாகிகள், பா.ஜ.க தலைவர்கள் பலரும் இது தொடர்பான கேள்வியை எழுப்பிவருகின்றனர். உரிய அனுமதி பெற்று, மெயின் ரோட்டில் நின்ற போலீசிஸ் அனைவரிடமும் கூறிவிட்டுதான் சென்றேன் என்று உதயநிதி பதிலடி கொடுத்த பிறகும், ஆதாரம் வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருவது வேடிக்கையாக உள்ளது.

ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்தை விடுங்க… இ-பாஸ் வாங்காம சாத்தான்குளம் எப்படின்னு சொல்லுங்க… – உதயநிதியை சீண்டும் ஆளுங்கட்சிஉதயநிதி ஸ்டாலின் தி.மு.க இளைஞரணி செயலாளர் மட்டுமல்ல, முரசொலி நாளிதழின் தலைமை நிர்வாகியும் கூட. பத்திரிகையாளர் என்ற முறையில் அவருக்கு எங்கு வேண்டுமானாலும் செல்ல உரிமை உள்ளது. முரசொலி நிர்வாகி என்ற வகையில் தமிழக அரசு வழங்கும் செய்தியாளர் அங்கீகார அட்டையும் மத்திய அரசு வழங்கும் அங்கீகார அட்டையையும் உதயநிதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அங்கீகார அட்டையை வைத்து சேகரிக்கலாமே தவிர, அரசியல் காரியங்களுக்கு பயன்படுத்துவது தவறு என்று சிலர் புது விளக்கம் அளித்துள்ளனர்.

ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்தை விடுங்க… இ-பாஸ் வாங்காம சாத்தான்குளம் எப்படின்னு சொல்லுங்க… – உதயநிதியை சீண்டும் ஆளுங்கட்சிஎனவே, உதயநிதி ஸ்டாலினுக்கு அரசு வழங்கிய அங்கீகார அட்டையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சகத்தில் புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாத்தான்குளம் தந்தை, மகன் மர்ம மரணம் பற்றி தினம் தினம் அதிர்ச்சி தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அதை திசை திருப்ப உதயநிதியை பிடித்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்கின்றனர் தி.மு.க-வினர்.