வெடி வைத்து உடைக்க இருந்த தொல்லியல் சின்னங்களைக் காப்பாற்றிய உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்

 

வெடி வைத்து உடைக்க இருந்த தொல்லியல் சின்னங்களைக் காப்பாற்றிய உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை செயலாளராகப் பணியாற்றியவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அவரை அங்கிருந்து தொல்லியல் துறைக்கு மாற்றியது அரசு. இத மாற்றலுக்குப் பலரும் எதிர்த்தார்கள். உதயசந்திரன் இன்று மாபெரும் தமிழ் பொக்கிஷத்தைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.

செஞ்சி, நெகனூர்பட்டி பகுதியில் சமணப்படுக்கைகளும் பிராமி எழுத்துகளும் இருக்கின்றன. ஆனால், அவை தகர்க்கப்பட இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், உதயசந்திரனுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இன்னும் பலரும் அதுகுறித்து தகவல் கொடுக்க அது காப்பாற்றப்பட்டிருக்கிறது.

வெடி வைத்து உடைக்க இருந்த தொல்லியல் சின்னங்களைக் காப்பாற்றிய உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்

இது குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு தொல்லியல்த் துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஆணை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

அந்த ஆணையில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் நெகனூர்பட்டியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணப்படுக்கைகள் உள்ளன. மேலும் இங்கு தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பிகள் உள்ளன. இதை கல்குவாரி பணிகளுக்காக சிலர் வெடி வைத்து தகர்ப்பதாக ரவிக்குமார் எம்.பி மற்றும் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து தொல்லியல் சின்னங்களைப் பாதுக்காக்க உரிய நடவடிக்கை எடுங்கள்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

வெடி வைத்து உடைக்க இருந்த தொல்லியல் சின்னங்களைக் காப்பாற்றிய உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்

இதனால், வரலாற்று சிறப்பு மிகுந்த தொல்லியல் சின்னங்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

இது குறித்து ரவிக்குமார் எம்பி, மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ’செஞ்சி நெகனூர்பட்டி சமணப் படுக்கைகளும் பிராமி எழுத்துகளும் காப்பாற்றப்பட்டன திரு உதயசந்திரன் IAS அவர்களின் வரலாற்றுச் சாதனை! விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கருகில் நெகனூர்பட்டி என்னுமிடத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணப் படுக்கைகளும் பிராமி எழுத்துப் பொறிப்புகளும் ஓவியங்களும் உள்ளன. அங்கே குவாரி பணிகளுக்காக அந்தப் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படுவதாக தகவல் கிடைத்தது. உடனே விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடமும், தமிழ்நாடு தொல்லியல்துறை ஆணையர்  உதயசந்திரன் IAS அவர்களிடமும் தெரிவித்தேன்.

வெடி வைத்து உடைக்க இருந்த தொல்லியல் சின்னங்களைக் காப்பாற்றிய உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்

நான் தகவல் சொல்லும்போது பகல் சுமார் 1 மணி இருக்கும். உடனடியாகத் தமிழக அரசின் தொல்லியல்துறை சார்பில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தொல்லியல் சின்னங்களை தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான பரிந்துரைகளை உடனே அனுப்புமாறும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தொல்லியல் மீது அக்கறைகொண்ட திரு உதயசந்திரன் இருந்ததால்தான் இது சாத்தியமானது. தமிழ் அறிவுலகம் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது’ என்று பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.