யூசி பிரவுசர் தடை: இந்த 5 இந்திய பிரவுசர்களை முயற்சியுங்கள்!

 

யூசி பிரவுசர் தடை: இந்த 5 இந்திய பிரவுசர்களை முயற்சியுங்கள்!

யூசி பிரவுசருக்கு மாற்றான 5 இந்திய பிரவுசர்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களுக்கு இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் இந்தியா – சீனா இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது.

இதையடுத்து இந்தியாவில் டிக்டாக், யூசி பிரவுசர் உட்பட 59 சீன மொபைல் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் யூசி பிரவுசருக்கு மாற்றாக இந்திய பிரவுசர்களை சிலவற்றை பயனர்கள் பயன்படுத்தி பார்ப்பதற்கு இதை விட சரியான தருணம் இருக்க முடியாது.

பாரத் பிரவுசர்:

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ப்ளூஸ்கை இன்வென்ஷன்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது தான் பாரத் பிரவுசர். இந்திய மாநிலங்களில் நடந்துள்ள முக்கிய செய்திகள் குறித்து இந்த பிரவுசரின் ஹோம் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும். இதன் எடை வெறும் 8 எம்.பி தான் என்பது கூடுதல் சிறப்பம்சம். குழந்தைகளுக்கான வீடியோக்கள், பாடல்கள், கேம்கள் இந்த பிரவுசரில் இடம்பெற்றுள்ளது.

யூசி பிரவுசர் தடை: இந்த 5 இந்திய பிரவுசர்களை முயற்சியுங்கள்!

எபிக் பிரைவசி பிரவுசர்:

பெங்களூருவை சேர்ந்த அலோக் பரத்வாஜ் என்ற தொழில்முனைவோரால் இந்த எபிக் பிரைவசி பிரவுசர் உருவாக்கப்பட்டது. விரல்ரேகை பாதுகாப்பு , என்கிரிப்ஷன் பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரவுசரில் உங்களது தகவல்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படுகிறது.

இந்தியன் பிரவுசர்:

இந்தியன் என்ற தலைப்பு கொண்ட பிரவுசரை தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த இந்தியன் பிரவுசர் சரியான தேர்வாக இருக்கும். இந்த பிரவுசரில் புகைப்படங்கள் தடை செய்யப்பட்டிருப்பதால் பிரவுசிங் அனுபவம் மிகவும் வேகமாக இருக்கும். நைட் மோடு அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது. டெல்லியை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் ஒன்று இந்த பிரவுசரை உருவாக்கி உள்ளது.

ஜியோபிரவுசர்:

இந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவுக்கு சொந்தமானது தான் இந்த ஜியோபிரவுசர். யூசி பிரவுசர் மற்றும் கூகுள் குரோமுக்கு மாற்றாக இந்த ஆப் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. டார்க் தீம், பிராந்திய மொழிகள் ஆதரவு, நியூஸ் அலர்ட்ஸ், க்யூ.ஆர் கோடு ஸ்கேனர் ஆகிய அம்சங்கள் இந்த பிரவுசரில் இடம்பெற்றுள்ளது. கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகளை இதில் ஒவ்வொரு பந்துக்கும் தெரிந்து கொள்ளலாம். இதன் எடை வெறும் 6.7 எம்.பி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒமிகோ:

ஒருவேளை உங்களுக்கு ஜியோபிரவுசரும் பிடிக்கவில்லை என்றால் ஒமிகோ பிரவுசர் சரியான தேர்வாக இருக்க வாய்ப்புள்ளது. லேட்டஸ்ட் வீடியோக்கள், தினசரி செய்திகள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளது. நிறைய டேப்கள், பக்க மொழிபெயர்ப்பு உள்ளிட்ட வசதிகள் இந்த பிரவுசரில் கிடைக்கிறது. வாய்ஸ் சர்ச் ஆப்ஷனும் இதில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த குழு ஒன்று இந்த பிரவுசரை வடிவமைத்துள்ளது.