Home உலகம் வெற்றிக்கரமாக செவ்வாய் கிரகத்தில் நுழைந்த அமீரகம்... கன்ட்ரோல் ரூமில் கண்ணீர் மழை... உலக நாடுகள் பாராட்டு!

வெற்றிக்கரமாக செவ்வாய் கிரகத்தில் நுழைந்த அமீரகம்… கன்ட்ரோல் ரூமில் கண்ணீர் மழை… உலக நாடுகள் பாராட்டு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டாரப் பாதையை அடைந்தது. உலகில் ஐந்தாவது நாடாக செவ்வாயில் தனது கால்தடத்தைப் பதித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் விண்வெளியில் பயணித்த ஹோப்,  நேற்றிரவு 7.30 மணிக்கு செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

494 மில்லியன் கிமீ தூரம் பயணித்துள்ள ஹோப் மணிக்கு 39 ஆயிரத்து 600 கிமீ வேகத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது. மணிக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் கிமீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஹோப் செவ்வாயை நெருங்கியதும் அதன் வேகம் 18 ஆயிரம் கிமீ ஆகக் குறைக்கப்பட்டது.

ஹோப் விண்கல திட்டம் 2014ஆம் ஆண்டு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நயானாலும், துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமாலும் அறிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு இதன் தயாரிப்புப் பணிகளைத் துணை அதிபர் தொடங்கிவைத்தார். ஜப்பான் நாட்டிலுள்ள தானேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து 2020ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி விண்ணில் MHI H2A என்ற ராக்கெட்டின் மூலம் ஏவப்பட்டது.

செவ்வாயை நெருங்கிக் கொண்டிருக்கும்போதே விண்வெளி கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றார் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது சயீத். வெற்றிக்கரமாக சுற்றுவட்டப்பாதையை நெருங்கியவுடன் அவர், “நீங்கள்(ஆராய்ச்சியாளர்கள்) சாதித்துவிட்டீர்கள். இது உங்களுக்கும் தேசத்துக்கும் கிடைத்த மரியாதை. வாழ்த்துகள்” என்று உணர்வுப்பூர்வமாகப் பேசினார். இதைக் கேட்ட விஞ்ஞானிகள் கண்களில் கண்ணீர் ததும்ப ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து ஆரவாரம் செய்தனர். இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அமீரகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

மூன்று ஆராய்ச்சிக் கருவிகளோடு செவ்வாய்க்குச் சென்றிருக்கும் ஹோப், செவ்வாய் கிரக வளிமண்டலத்தின் முழுமையானை புகைப்படத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவகாலம் மற்றும் தினசரி ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்ளும் வகையில் வளிமண்டலத்தின் வெவ்வேறு பகுகிககளில் வெவ்வேறு தரவுகளைச் சேகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தத் தரவுகள் செவ்வாய் வளிமண்டலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் நிலவும் காலநிலை இயக்கவியல், வானிலை ஆகியவை குறித்த புரிதலை உலகிற்கு உணர்த்தும் என்கின்றனர். அதேபோல வளிமண்டலத்தில் ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் எவ்வாறு நகர்கின்றன, எவ்வாறு செவ்வாயிலிருந்து வெளியேறுகின்றன உள்ளிட்டைவை குறித்தும் ஹோப் கண்டுப்பிடிக்கும் என ஹோப்புடன் இருக்கிறார்கள் அமீரக விஞ்ஞானிகள்!

மாவட்ட செய்திகள்

Most Popular

நான் கேட்பேன்- னு சொன்னீங்களே! நீங்களுமா கமல் சார் இப்படி?

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கமல் உருவம் பதித்த டி- ஷர்ட்டுகள், டிபன் பாக்ஸ்களை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கணும்! செய்தியாளர்களை விலைக்குவாங்கிய ஓபிஎஸ் மகன்!!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இளைய மகன் ஜெயபிரதீப்க்கு தேனி பிரஸ் கிளப் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்களை விலைக்கு வாங்க நினைக்கும்...

பாமக போட்டியிடும் தொகுதிகள் இவைதான்! வெளியானது பட்டியல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. திமுக...

“ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டுமென சசிகலா கூறினார்”

சசிகலாவை முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நிர்வாகி யுவராஜ், “சசிகலாவுடன் கழகத்தினர் ஒற்றுமையாக இருந்து...
TopTamilNews