“இந்தியாவுல எதுவுமே சரியில்ல; அங்க இருந்து சீக்கிரமா கிளம்புங்க” – அமெரிக்கர்களுக்கு அலர்ட்!

“இந்தியாவுல எதுவுமே சரியில்ல; அங்க இருந்து சீக்கிரமா கிளம்புங்க” – அமெரிக்கர்களுக்கு அலர்ட்!

உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக கொரோனாவால் அதிக சேதாரமடைந்த நாடாக இந்தியா இருக்கிறது. தினசரி பாதிப்பில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. நாளொன்றுக்கான கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்க உயிரிழப்போ 4 ஆயிரத்தை எட்டிப் பிடிக்கிறது.

“இந்தியாவுல எதுவுமே சரியில்ல; அங்க இருந்து சீக்கிரமா கிளம்புங்க” – அமெரிக்கர்களுக்கு அலர்ட்!

இது மட்டுமில்லாமல் முறையான மருத்துவக் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் பெரும்பாலான வட மாநிலங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள், கொரோனா தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றிற்குப் பற்றாக்குறை ஏற்பட்டு திண்டாடி வருகின்றன. இதனால் முறையாக சிகிச்சை பெற முடியாமல் மக்கள் கொத்து கொத்தாக மடிகிறார்கள். அப்படி மடிபவர்களுக்குக் கூட நிம்மதியாக இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் உறவினர்கள் தவிக்கின்றனர். இதனால் நாடெங்கும் மரண ஓலம் காதைக் கிழிக்கின்றன.

“இந்தியாவுல எதுவுமே சரியில்ல; அங்க இருந்து சீக்கிரமா கிளம்புங்க” – அமெரிக்கர்களுக்கு அலர்ட்!

இந்தியாவின் நிலைமையைக் கண்டு உலக நாடுகள் அச்சமடைந்து போக்குவரத்துக்குத் தடைவிதித்து வருகின்றன. பிரிட்டன், துபாய், ஹாங்காங் நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு விமானப் போக்குவரத்தைத் தடை செய்திருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து போக்குவரத்தை மேற்கொள்கின்றன. இச்சூழலில் இந்தியாவிருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு அலர்ட் செய்துள்ளது. இந்தியாவில் மருத்துவச் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அமெரிக்கர்களை சீக்கிரமாக வெளியேற வலியுறுத்தியுள்ளது.