இறுதியாக அமெரிக்காவும் இந்தியர்களுக்கு தடை விதித்தது!

 

இறுதியாக அமெரிக்காவும் இந்தியர்களுக்கு தடை விதித்தது!

உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக கொரோனாவால் அதிக சேதாரமடைந்த நாடாக இந்தியா இருக்கிறது. தினசரி பாதிப்பில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. நாளொன்றுக்கான கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. உயிரிழப்போ 4 ஆயிரத்தை எட்டிப் பிடிக்கிறது.

இறுதியாக அமெரிக்காவும் இந்தியர்களுக்கு தடை விதித்தது!

இந்தியாவின் நிலைமையைக் கண்டு உலக நாடுகள் அச்சமடைந்து போக்குவரத்துக்குத் தடைவிதித்து வருகின்றன. பிரிட்டன், துபாய், ஹாங்காங் நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு விமானப் போக்குவரத்தைத் தடை செய்திருக்கின்றன. அமெரிக்காவும் தடைவிதிக்க ஆலோசித்தது. இச்சூழலில் ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் அமெரிக்கா வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இறுதியாக அமெரிக்காவும் இந்தியர்களுக்கு தடை விதித்தது!

இதுதொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், “அமெரிக்கர்கள் அல்லாத, அமெரிக்காவில் குடியுரிமை பெறாதவர்கள் இந்தியாவிலிருந்து வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இதில் மாணவர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், சில தனிநபர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

இறுதியாக அமெரிக்காவும் இந்தியர்களுக்கு தடை விதித்தது!

தகுதியான எஃப்-1 மற்றும் எம்-1 விசா வைத்திருக்கும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர்களின் படிப்பைத் தொடரலாம். தூதரகத்தைத் தொடர்புகொள்ள வேண்டியதில்லை. ஆனால், தங்களின் கல்வியாண்டு தொடங்க 30 நாட்களுக்கு முன்பே அமெரிக்காவுக்குள் மாணவர்கள் வந்துவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.