ரத்தம் உறைதல் பிரச்னை: ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாடு நிறுத்தம்

ரத்தம் உறைதல் பிரச்னை: ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாடு நிறுத்தம்

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த பந்தயத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் இடம்பெற்றது. எடி 15, கோ 2.5 என்ற பெயரில் தடுப்பூசியை கண்டுபிடித்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், அதனை தன்னார்வலருக்கு செலுத்தி சோதனை செய்தது. தடுப்பு மருந்து சோதனையில் வெற்றிபெற்றதையடுத்து, அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதித்து மருந்து மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவு பிறப்பித்தது.

ரத்தம் உறைதல் பிரச்னை: ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாடு நிறுத்தம்

இந்நிலையில் அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் ரத்தம் உறைதல் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.