லாக்டவுனில் அதிகரித்த ‘பெண்களுக்கு எதிரான வன்முறை’ : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!

 

லாக்டவுனில் அதிகரித்த ‘பெண்களுக்கு எதிரான வன்முறை’  : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!

உலகளவில் மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் பாலியல் வன்முறைகளை அனுபவித்திருக்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

லாக்டவுனில் அதிகரித்த ‘பெண்களுக்கு எதிரான வன்முறை’  : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!

கடந்த மார்ச் 8 ஆம் தேதி உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு மாறி மாறி பலரும் வாழ்த்து கூறினர். பெண்ணின்றி அமையாது உலகு, பெண்கள் தியாகத்தின் உருவம் என சமூக வலைதளங்களில் பல்வேறு வாழ்த்துகள் பரவி வந்தது. சுதந்திரம், கல்வி, பெண் உரிமை, பெண் விடுதலை போன்றவை முழுமையாக இருக்கும் நாள் தான் மகளிர் தினம். இப்படி இருக்கும் சூழலில் ஐநா சுகாதார நிறுவனம் மேற்கொண்ட புதிய ஆய்வில் , உலகளவில் கிட்டத்தட்ட மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் தொடுவது உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பரவலாக இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் இதுபோன்ற வன்முறைகளை 20 வயது அடையும் முன்னரே தங்களுக்கு நெருக்கமான உறவுகளால் பெண்கள் அனுபவிக்க நேரிடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010 முதல் 2018 இல்லாத அளவிற்கு கொரோனா காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வு சொல்கிறது. அரசாங்கம் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது குடும்ப வன்முறைக்கு மிகப்பெரிய காரணம் என்று சொல்லப்படுகிறது.ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 15 – 49 வயதுடைய பெண்கள் அதிகளவு தங்கள் இணையால் வன்முறைக்குட்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

லாக்டவுனில் அதிகரித்த ‘பெண்களுக்கு எதிரான வன்முறை’  : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!

உலகளவில் இதுவரை பெண்களுக்கு எதிரான வன்முறை மிக நெருக்கமான உறவுகளாலேயே ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 641 மில்லியன் பெண்கள் பாதிக்கபட்டுள்ளனர். ஆனால் ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 6 சதவீதம் பேர் வெளிநபர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இத்தகைய வன்முறை குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் பெண்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளதும், சில நாடுகளில் அனைத்து பெண்களிலும் பாதி பேர் பாலியல் வன்முறை கொடுமையில் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் கசப்பான உண்மை.