விமானத்தில் வந்த பெண் -சந்தேகப்பட்ட சுங்க துறை – அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

விமானத்தில் வந்த பெண் -சந்தேகப்பட்ட சுங்க துறை – அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

பட்டப்பகலில் விமானநிலையத்தில் 98 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை கடத்திய நபர்களை போலீஸ் கைது செய்துள்ளது

விமானத்தில் வந்த பெண் -சந்தேகப்பட்ட சுங்க துறை – அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து தோஹா வழியாக இரண்டு சர்வதேச பயணிகள் வந்தனர் .அந்த பயணிகள் ஒரு இளம் பெண்ணும் ஒரு ஆணும் ஆவார்கள் .அவர்களை பார்த்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர்களின் மேல் சந்தேகம் வந்தது .மேலும் அவர்களுக்கு, இவர்களை பற்றி சில ரகசிய தகவலும் வந்தது .அதனால் அவர்களை அந்த விமான நிலையத்தின் அதிகாரிகள் சோதனை போட கூட்டி சென்றனர் .அப்போது அந்த நபர்கள் தங்களிடம் கடத்தல் பொருட்கள் எதுவும் இல்லையென்று கூறினர் .ஆனால் அதிகாரிகள் அந்த பெண்ணின் கையிலிருந்த பை மீது சந்தேகம் கொண்டு அதை மெட்டல் டிடெக்க்டர் மூலம் சோதித்தனர் .அப்போது அதில் எந்தவிதமான துப்பும் கிடைக்கவில்லை .இருந்தாலும் அந்த பெண்ணின் பையை அதிகாரிகள் வேறு ஒரு ஸ்கேன் மெஷினில் வைத்து சோதனை யிட்டனர் அப்போது அந்த பையில் 7 கிலோ ஹெராயின் இருப்பதை கண்டறிந்தனர்,அவை பல பொட்டலங்களாக கட்டப்பட்டு அடுக்கப்பட்டிருந்தன .
அந்த ஆணும் பெண்ணும் கொண்டு வந்த 14 கிலோ ஹெராயின் இன்றைய சந்தை மதிப்பில் 98 கோடி ரூபாய் ஆகும் .அவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிறகு அந்த இரு கடத்தல் காரர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்

விமானத்தில் வந்த பெண் -சந்தேகப்பட்ட சுங்க துறை – அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்