ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை : விடிய விடிய மீட்புப்பணி! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை : விடிய விடிய மீட்புப்பணி!

மீட்புக் குழு
மீட்புக் குழு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில்  வீட்டு தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் என்ற  2 வயது குழந்தை நேற்று மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில்  தவறி விழுந்துள்ளது.

surjith

இதனால் குழந்தையை மீட்கும் பணியில் கடந்த 13 மணிநேரமாகத் தீயணைப்பு படையினரும், போலீசாரும் போராடி வருகின்றனர். குழந்தை சுர்ஜித் விழும் போது குழந்தை 26 அடியிலிருந்த நிலையில், தற்போது சுர்ஜித் 68 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால்  மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

surjith

இதுகுறித்து தெரிவித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் காலை 7:30 அல்லது 8 மணிக்குள் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்துவிடுவார்கள் என்று உறுதியளித்துள்ளார். 

surjith

முன்னதாக சுர்ஜித் வீட்டு  தோட்டத்தில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு போர்வெல் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் அது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே மூடப்பட்ட நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக மீண்டும் அங்கு பள்ளம் ஏற்பட்டதால்  இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.