டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக, தமிழகத்தில் விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி

 

டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக, தமிழகத்தில் விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி

டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் டிராக்டர் பேரணிக்கு ஆதராக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர்

திருச்சி மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்க நிர்வாகிகள், மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர்..

கோவையில் வேளாண் சட்டங்கள் மற்றும் மூலப்பொருடகளின் விலை உயர்வை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நடைபெற்ற இந்த பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கொண்டனர்

டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக, தமிழகத்தில் விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி

கடலூரில் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்துக்கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதனையொட்டி, 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலூர் படைவீரர்கள் மாளிகையில் இருந்து பேரணியாக புறப்பட்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர்

தஞ்சையில் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக விவசாயிகள் டிராக்டர், மாட்டுவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களில் பேரணி செல்ல முயன்றனர். தஞ்சை புறவழிச்சாலை சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 4 டிராக்டர்களை மட்டும் பேரணியாக செல்ல அனுமதி வழங்கினர்