தருமபுரியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… ஆட்சியர் கார்த்திகா தொடங்கி வைத்தார்…

 

தருமபுரியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… ஆட்சியர் கார்த்திகா தொடங்கி வைத்தார்…

தருமபுரி

தருமபுரியில் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 32-வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

இதனையொட்டி, மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கார்த்திகா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். இதில், போலீசார், போக்குவரத்து ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தருமபுரியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… ஆட்சியர் கார்த்திகா தொடங்கி வைத்தார்…

நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த பேரணியின்போது சாலை பாதுகாப்பு மற்றும் தலைக் கசவம் அணிவதன் அவசியம் குறித்த பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதுதொடர்பான துண்டு பிரசுரங்களும் பொதுமக்களிடம் வழங்கினர். மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணி தருமபுரி நகர 4 ரோடு பகுதியில் சென்று நிறைவடைந்தது..