இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு! – காய்கறி, மளிகைக் கடைகள் கூட திறக்கப்படாது…

 

இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு! – காய்கறி, மளிகைக் கடைகள் கூட திறக்கப்படாது…

வருகிற 19ம் தேதி முதல் மீண்டும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த தளர்வுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஜூன் 19ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. 12 நாள் ஊரடங்கின் போது காய்கறி, மளிகைக் கடை, பெட்ரோல் பங்குகள் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் ஜூன் 21 மற்றும் 28 ஆகிய இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த தளர்வும் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு! – காய்கறி, மளிகைக் கடைகள் கூட திறக்கப்படாது…
அந்த இரண்டு நாட்களிலும் நள்ளிரவில் எந்த தளர்வுமில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த இரு நாட்களிலும் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர்த்து வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
கட்டுப்பாடு பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு; அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு ஒரு நாளைக்கு இரு முறை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.