’இரண்டு வீரர்களை IPL -லில் தடை செய்ய வேண்டும்’ கே.எல்.ராகுல் சொல்வது யாரை?

’இரண்டு வீரர்களை IPL -லில் தடை செய்ய வேண்டும்’ கே.எல்.ராகுல் சொல்வது யாரை?

இன்றைய போட்டியில் ராயல்சேலஞர்ஸ் பெங்களுரை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

பெங்களூர் அணி 7 போட்டிகளில் ஆடி, 5-ல் வென்று 10 புள்ளிகளோடு பாயிண்ட் டேபிளில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, நெட் ரன்ரேட்டும் அதிகம் கிடைக்கும்பட்சத்தில் முதலிடத்தைப் பெற வாய்ப்பிருக்கிறது.

’இரண்டு வீரர்களை IPL -லில் தடை செய்ய வேண்டும்’ கே.எல்.ராகுல் சொல்வது யாரை?

பாயிண்ட் டேபிளில் கடைசி இடத்தில் இருக்கிறது பஞ்சாப் அணி. 7 போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வென்று, 2 புள்ளிகளோடு 8-ம் இடத்தில் உள்ளது. இன்று வென்றாலும் அதன் இடத்திலிருந்து முன்னேற வாய்ப்பில்லை. ஆனாலும், அடுத்த போட்டியில் வென்றால் முன்னேற முடியும் என்பதால் கடுமையாகப் போராடும்.

இந்நிலையில் போட்டி குற்த்து கே.எல்.ராகுல் பேசும்போது, ‘டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி இருவரையும் தடை செய்ய வேண்டும். இவர்கள் நிறைய போட்டிகளில் ஆடிவிட்டனர். அதனால், இளைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என்று வேடிக்கையாகச் சொன்னார் ராகுல்.

’இரண்டு வீரர்களை IPL -லில் தடை செய்ய வேண்டும்’ கே.எல்.ராகுல் சொல்வது யாரை?

டி வில்லியர்ஸ் ஆட்டம் சூடு பிடித்துவிட்டால் யாராலும் நிறுத்த முடியாது என்பதற்கு கொல்கத்தாவுடான போட்டியே சரியான உதாரணம். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 73 ரன்கள் விளாசிய டி வில்லியர்ஸ் தள்ளினார். எதிரணி பவுலர்களை எத்தனை முறை மாற்றியும் பயனில்லை. இதே நிலை இன்றைக்கு நீடித்தால் பஞ்சாப் பஸ்பமாகி விடும்.