ஊரடங்கில் மதுபாட்டில்களை விற்ற பெண் போலீஸ் உள்பட 2 பேர் சஸ்பெண்ட்!!

 

ஊரடங்கில் மதுபாட்டில்களை விற்ற பெண் போலீஸ் உள்பட 2 பேர் சஸ்பெண்ட்!!

திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்ற சிறுகனுர் இன்ஸ்பெக்டர் சுமதி , ஏட்டு ராஜா இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மது கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை, கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

ஊரடங்கில் மதுபாட்டில்களை விற்ற பெண் போலீஸ் உள்பட 2 பேர் சஸ்பெண்ட்!!

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1,700 மதுபாட்டில்களை 2 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்ததாக போலீசாரே விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகனூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் தலைமை காவலர் ராஜா இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போலீசார் இருவரையும் சஸ்பெண்ட் செய்து திருச்சி ஐ.ஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.