லாரியின் அடியில் சிக்கி தீப்பற்றிய பைக்- இருவர் உடல் கருகி பலியான சோகம்

 

லாரியின் அடியில் சிக்கி தீப்பற்றிய பைக்- இருவர் உடல் கருகி பலியான சோகம்

ஆந்திரா

ஆந்திராவில் லாரியின் அடியில் சிக்கிய இருசக்கர வாகனம் திடீரென தீ பற்றி எரிந்ததில், அதில் பயணம் செய்த இருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் நாகரூரை சேர்ந்தவர் நாராயணாரெடி(40). இவர் யாதிகி மண்டலம் போகலகட்டா கிராமத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் ரோஷிரெட்டி (64) என்பவருடன், பச்சுபள்ளி பாட்டா பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் நாகரூருக்கு திரும்பியுள்ளார். எங்கிலிபாண்டா புறநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்ற வாகனத்தை நாராயணரெட்டி முந்திச்செல்ல அதிவேகமாக சென்றுள்ளார்.

லாரியின் அடியில் சிக்கி தீப்பற்றிய பைக்- இருவர் உடல் கருகி பலியான சோகம்

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் முன்னால் சென்ற கிரானைட் கற்கள் ஏற்றிச்சென்ற லாரியின் அடியில் சிக்கி விபத்துக்கு உள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் உடைந்து தீப்பற்றியது. அடுத்த சில நொடிகளில் மளமளவென லாரியிலும் தீ பரவியதால், அதில் இருந்தவர்கள் கீழே இறங்கி உயிர் தப்பினர். இந்த கோர விபத்தில், லாரியின் கீழ் சிக்கிய ரோஷிரெட்டி மற்றும் நாராயணாரெட்டி ஆகியோர் உயிருடன் தீயில் எரிந்து கருகினர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் லாரியில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து, குத்தி மண்டலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.