சபரிமலை மண்டலப் பூஜை: பக்தர்களுக்கு அனுமதி !

 

சபரிமலை மண்டலப் பூஜை:  பக்தர்களுக்கு அனுமதி !

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை மண்டலப் பூஜை:  பக்தர்களுக்கு அனுமதி !

கேரள மாநில மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஆலயமாக விளங்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனிடையே திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், பாதுகாப்பு விதிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்தார்.

சபரிமலை மண்டலப் பூஜை:  பக்தர்களுக்கு அனுமதி !

பக்தர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆன்லைன் வரிசை நடைமுறை மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அதேசமயம் சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கோ, எருமேலி, பம்பை ஆற்றில் குளிக்கவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளின்படி 65 வயதுக்கு மேல் உள்ள பக்தர்களுக்கும் குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை என்றும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்