தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் சிறையில் அடைப்பு

 

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் எல்லைக்கு உட்பட்ட பெரியமாதா சர்ச் தெருவை சேர்ந்தவர் கிளிண்டன். இவரை கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சாமுவேல்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ், அவரது நண்பர்கள் டேனியல்ராஜ், சந்தனராஜ் ஆகியோர் பீர் பாட்டிலால் தாக்கி படுகொலை செய்தனர். புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் கைதுசெய்தனர்.

இதேபோல், கடந்த ஜனவரி 21ஆம் தேதி தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மடத்தூர் பகுதியில் சாலையில் நடந்தசென்ற நபரை கத்தியால் தாக்கி பணம் பறித்த வழக்கில் ஜெயமுருகன் என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் சிறையில் அடைப்பு

இந்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய அந்தோணிராஜ் மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைதான ஜெயமுருகன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்ட்ட காவல் ஆய்வாளர்கள், மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாருக்கு அறிக்கை அளித்து இருந்தனர்.

அறிக்கையின் அடிப்படையில் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரை செய்திருந்த நிலையில், அதனை ஏற்று தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதனை அடுத்து, இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.