சமயபுரம் அருகே கால்வாயில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழப்பு

சமயபுரம் அருகே கால்வாயில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கால்வாயில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமயபுரம் அருகே கால்வாயில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழப்பு

சமயபுரம் பள்ளிவிடை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன். இவருக்கு அனிதா என்ற மனைவியும், தர்ஷினி(6) மற்றும் நரேன்(4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். பள்ளிவிடை பாலம் பகுதியில் உள்ள பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் இவர்கள் வசித்து வந்தனர். தம்பதியர் இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், குழந்தைகளை ரவிச்சந்திரனின் தாயார்

சமயபுரம் அருகே கால்வாயில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழப்பு

கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை குழந்தைகள் இருவரும் இயற்கை உபாதைகளை கழிக்க செல்வதாக கூறிவிட்டு பெருவளை வாய்க்கால் கரை பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால், நீண்டநேரம் ஆகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த ரவிச்சந்திரனின் தாயார் ஆற்று கரைபகுதிக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைகளின் காலணிகள் மட்டும் கிடந்த நிலையில், குழந்தைகளை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் நீரில் மூழ்கி இருக்கலாம் என அச்சமடைந்த அவர், சமயபுரம்

சமயபுரம் அருகே கால்வாயில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழப்பு

தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குழந்தைகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். லால்குடி கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் இரவிலும் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை

சமயபுரம் அருகே கால்வாயில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழப்பு

குழந்தைகள் இருவரது உடல்களையும் மீட்ட தீயணைப்புத்துறையினர், அவற்றை உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது