ஐதராபாத் ஏடிஎம் கொள்ளையில் தேடப்பட்ட இருவர், திருவள்ளூரில் அதிரடியாக கைது

 

ஐதராபாத் ஏடிஎம் கொள்ளையில் தேடப்பட்ட இருவர், திருவள்ளூரில் அதிரடியாக கைது

திருவள்ளூர்

ஐதராபாத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இருவரை, திருவள்ளூரில் அதிரடியாக கைதுசெய்யப்பட்டனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏடிஎம் மையத்தில் மர்மகும்பல் பணத்தை கொள்ளைடித்துச சென்றது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநில கொள்ளையர்கள் 6 பேரை தெலங்கானா போலீசார் கைதுசெய்தனர்.

ஐதராபாத் ஏடிஎம் கொள்ளையில் தேடப்பட்ட இருவர், திருவள்ளூரில் அதிரடியாக கைது

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான வாசிம் மற்றும் ஹாசன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பங்கியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் எஸ்பி சண்முகப்பிரியா மற்றும் திருவள்ளூர் எஸ்பி., அரவிந்தன் ஆகியோருக்கு கொடுத்த உத்தரவின் பேரில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஐதராபாத் ஏடிஎம் கொள்ளையில் தேடப்பட்ட இருவர், திருவள்ளூரில் அதிரடியாக கைது

செல்போன் சிக்னலை வைத்து கொள்ளையர்கள் நடமாட்டத்தை கண்காணித்தபோது, அவர்கள் லாரி ஒன்றில் தப்பிச்செல்வது உறுதியானது. இதனால், போலீசார் காஞ்சிபுரத்திலிருந்து அந்த வாகனத்தை துரத்திச் சென்றனர். அப்போது, திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியில் அந்த வாகனம் பெட்ரோல் பங்கில் டீசல் போட்டுக் கொண்டு இருப்பது தெரியவந்தது.

ஐதராபாத் ஏடிஎம் கொள்ளையில் தேடப்பட்ட இருவர், திருவள்ளூரில் அதிரடியாக கைது

அங்கு விரைந்து சென்ற திருவள்ளூர் எஸ்பி., அரவிந்தன், காஞ்சிபுரம் எஸ்பி. சண்முகப்பிரியா தலைமையிலான போலீசார் லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, வாசிம் மற்றும் ஹாசன் ஆகியோர் லாரியில் மறைந்து இருப்பது தெரியவந்தது. இருவரையும் பிடித்து மேற்கொண்ட விசாரணையில் ஐதராபாத்தில் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கைதுசெய்த போலீசார் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.