கேரளாவுக்கு கஞ்சா கடத்திய இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

 

கேரளாவுக்கு கஞ்சா கடத்திய இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

தேனி

கேரளாவுக்கு கஞ்சாவை கடத்தமுயன்று கைதான 2 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு வாகனத்தில் 250 கிலோ கஞ்சாவை கடத்தமுயன்ற, அதே பகுதியை சேர்ந்த மலைச்சாமி மற்றும் கண்ணன் ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கேரளாவுக்கு கஞ்சா கடத்திய இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

இந்த நிலையில், கஞ்சா கடத்திய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க, காவல் ஆய்வாளர் அளித்த அறிக்கையின் பேரில் மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி, தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவிற்கு பரிந்துரை வழங்கினார். அதனை ஏற்று ஆட்சியர் இன்று இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவை அடுத்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மலைச்சாமி மற்றும் கண்ணன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.