கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது – 8 கிலோ கஞ்சா பறிமுதல்

 

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது – 8 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி

கம்பம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கம்பம் வடக்கு காவல்நிலைய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பதினெட்டாம் கால்வாய் அருகே சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்ற 3 பேரை போலீசார் அழைத்து விசாரிக்க முயன்றனர். அப்போது, அவர்களில் ஒருவர் தப்பியோடினார்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது – 8 கிலோ கஞ்சா பறிமுதல்

இதனை அடுத்து மற்ற இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, போலீசாரின் கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் வைத்திருந்த பையினை பிடிங்கி சோதனையிட்டனர். அதில், கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் கம்பம் பகுதியை சேர்ந்த பாண்டியன் (50) மற்றும் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த சுரேஷ் குமார்  (30) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த சுமார் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்தனர். மேலும், தப்பி ஓடிய கொடியழகன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.